அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன்(10) நிறைவு

Colombo (News 1st) அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளையுடன்(10) நிறைவடைகின்றது.

இதுவரை 8 இலட்சத்து 35 ஆயிரம் மேன்முறையீடுகளும் 11000 இற்கும் அதிகமான ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை நாளை(10) பிற்பகலுக்கு முன்னர் பிரதேச செயலாளர்களிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான புதிய விண்ணப்பதாரர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் மீண்டும் கோரப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles