திருமதி சரஸ்வதி குணலிங்கம்

பிறப்பு06 JAN 1949, இறப்பு11 JUN 2023

வயது 74

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) யாழ் ஆனைப்பந்தி, Jaffna, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி குணலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அம்மா என்ற எங்களின் உயிர்மூச்சு
அகிலத்தை விட்டு பிரிந்து மாதம் ஒன்று வந்தும்
அழுத கண்ணீர் காயவில்லை அம்மா
எங்கள் அழுகையும் தீரவில்லை எமக்கு
உங்களின் பிரிவு என்றும் சோகமே எமக்கு தாயே
தந்தையை பிரிந்து தவித்த போதெல்லாம்
தாயும் தந்தையுமாய் தாங்கி நின்றீர் அம்மா
கலகலப்பாய் இருந்த எங்கள் இல்லமும்
இன்றோ இருள் சூழ்ந்து காட்சி தருகின்றதே
அப்பாவோடு ஒன்றாய் கலந்திட இறையருளை
நித்தம் வேண்டித் துதிக்கின்றோம் தாயே ஓம்சாந்தி!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்..!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 10-07-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 08.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் இடம்பெற்று வீட்டுக்கிருத்திய கிரியைகள் 12-07-2023 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் யாழ் அத்தியடி அருள்மிகு ஸ்ரீ சிதம்பர நடராஜ வீரகத்திப்பிள்ளையார் கணபதி கலாச்சார மண்டபத்தில் நடைபெற இருப்பதனால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 298, நாவலர் வீதி,
ஆணைப்பந்தி சந்தி,
யாழ்ப்பாணம்.

இங்ஙனம்,குடும்பத்தினர் (மகன் சபேசன்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles