புத்தளம் களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

Colombo (News 1st) புத்தளம் களப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோகிராமிற்கும் அதிக தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

புத்தளம் களப்பு, பத்தலங்குண்டு தீவுக்கருகில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யபட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

கற்பிட்டியை சேர்ந்த 27 மற்றும் 35 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட தங்கத்துடன் சுங்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles