Sunday, February 8, 2026
Homeதலைமன்னார் இறங்குதுறை அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன

தலைமன்னார் இறங்குதுறை அபிவிருத்திக்கு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன

Colombo (News 1st) தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில்  உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது. 

மன்னார் மற்றும் இராமேஷ்வரத்திற்கு இடையில் பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்கும் வகையில், குறித்த இறங்குதுறை விரைவாக அபிவிருத்தி செய்யப்படும் என அமைச்சின் செயலாளர் K.D.S.ருவன்சந்திர தெரிவித்தார்.

அண்மையில் மன்னார் இறங்குதுறையை சூழவுள்ள பகுதியை துறைமுகமாக மேம்படுத்தும் வகையில், வர்த்தமானி வெளியிடப்பட்டது.

முதலீட்டாளர்களினால் முன்வைக்கப்படும் முன்மொழிவுகளை கவனத்தில் கொண்டு பொருத்தமான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கையொன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular