மீண்டும் ஜனாதிபதியாவார் ரணில் – மன்னாரில் அமைச்சர் சாமர சம்பத் தெரிவிப்பு

மக்கள் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவையே தெரிவு செய்வார்கள் என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மான்னாரில் உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிறுவன பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்றது.

மன்னார் உப்பு உற்பத்தி நிலையத்தின் முகாமையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்
சாமர சம்பத் தசநாயக்க மற்றும் உப்பு உற்பத்தி நிறுவன அதிகாரிகள் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த உப்பு உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தொழிலாளர்கள் என 150 பேருக்கு வருடாந்த ஊக்குவிப்புத் தொகை கொடுப்பனவுகள் காசோலைகளாக வழங்கி வைக்கப்பட்டன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles