இந்திய ஹோட்டல்களில் தீப்பரவல்..!

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவின் பிஸ்ராக் பொலிஸ் நிலையப் பகுதியிலுள்ள ஹோட்டலில் இன்று காலை திடீரென தீப்பற்றியது.

இதனையடுத்து, மக்கள் ஹோட்டலில் இருந்து உடனடியாக வெளியேறினர். அந்த சமயத்தில் தீ அருகிலுள்ள ஹோட்டல்களுக்கும் பரவியதால் சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடனடியாக மக்கள் ஹோட்டலிலிருந்து வெளியேறியதால் உயிர் சேதமோ, காயமோ ஏற்படவில்லை. 6 ஹோட்டல்கள் மற்றும் 2 கடைகளில் தீ பரவியுள்ளதால் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்க்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles