பிரான்ஸில் 11 வயது சிறுமி லிஹன்னா கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 41 வயதான ஜெரோம் பரெல்லா என்ற சந்தேகநபரின் பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னரே பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், நாடு முழுவதும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஒரே நாளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.
போராட்டக்காரர்கள் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் குறித்து முன்பே பல முறை முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் பொலிஸ் விசாரணை தாமதமானது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
லிஹன்னா கடந்த வாரம் காணாமல் போயிருந்தார். பின்னர் அவரின் உடல் ஒரு பண்ணை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர் தற்போது காவலில் உள்ள நிலையில் அவர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பிரான்ஸில் சிறார் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் குறித்து கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
