பாரதிராஜாவின் உடலுக்கு அரச மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு முழு அரச மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இயக்குநர் இமயம் என்று போற்றப்பட்ட பாரதிராஜா உடல்நலக்குறைவு வயது மூப்பு காரணமாக இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார்.

அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்இ பாரதிராஜாவின் கலைப் பங்களிப்புகளையும் தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றிய மகத்தான சேவையையும் கௌரவிக்கும் வகையில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இதேநேரம், பாரதிராஜாவின் இறுதிநிகழ்வு அவரின் சொந்த இடமான தேனியில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

பாரதிராஜாவுக்கு இந்தியாவின் உயர் விருதான பத்மஸ்ரீ விருது 2004ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஈழத் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தும் இந்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles