விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை யுத்தக் குற்றமாக கருதி விசாரிக்க வேண்டும் என்று சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம். பி. தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ரோஹண விஜயவீரவின் மகன், சஹ்ரானின் மகன் கொலை செய்யப்படாமல் பாதுகாக்கப்பட்டது போல் பிரபாகரனின் மகனும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும் – என்றும் அவர் மேலும் கூறினார்.
