ஹீரோயின் ஆனார் மாயா: வெளியானது டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்..!

பிக் பாஸ் 7 நிகழ்ச்சி புகழ் மாயா கிருஷ்ணன் ஹீரோயினாக நடிக்கும் ஃபைட்டர் ராஜா தெலுங்கு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதை பார்த்த மாயா ஆதரவாளர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார்கள்.

கடந்த 2015ம் ஆண்டு ரிலீஸான வானவில் வாழ்க்கை படம் மூலம் நடிகையானவர் மாயா கிருஷ்ணன். தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் ஹீரோயினாகியிருக்கிறார்.

ராம்ஸ் ஹீரோவாக நடிக்கும் ஃபைட்டர் ராஜா தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் மாயா. அந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டார்கள். இன்று நடந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் மாயா கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி அவரின் ஆதரவாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

தெலுங்கு சினிமா ரசிகர்களோ, மாயாவை டோலிவுட்டுக்கு வரவேற்று வாழ்த்தியிருக்கிறார்கள்.

ஃபைட்டர் ராஜா போஸ்டரை பார்த்த மாயா ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது..,

மாயா அக்காவுக்கு நல்ல காலம் பிறந்தாச்சு. வாழ்த்துக்கள் அக்கா. இது வெறும் ஆரம்பம் தான். மாயா நிஜமான ஃபைட்டர். இனி அவருக்கு வெற்றி மேல் வெற்றி தான். பிக் பாஸ் டைட்டிலை வெல்லாவிட்டாலும் பெரிய பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. யாருக்கு வேண்டும் அந்த பிக் பாஸ் டைட்டில் என தெரிவித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில் மாயா பேசிய வீடியோவை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் பூர்ணிமாவை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் மாயாவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கிறது.

இந்த ஆண்டு வரப்போகும் மாபெரும் வசூல் சாதனை படங்கள்..

பிக் பாஸ் 7 வீட்டில் உருவானது தான் மாயா, பூர்ணிமா இடையேயான நட்பு. அந்த நட்பு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாயாவும், பூர்ணிமாவும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சந்தித்து பேசுகிறார்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மாயாவுக்கு மேளதாளத்துடன் தன் வீட்டில் பயங்கர வரவேற்பு கொடுத்தார் பூர்ணிமா. அந்த வீடியோ வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles