நாடு திரும்பிய முருகன் உள்ளிட்ட மூவர்..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் உள்ளிட்ட மூவரும் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர்.

அவர்கள் மூவரும் திருச்சி முகாமிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டநிலையில், இன்று காலை 10 மணிக்கு கொழும்பு வரும் விமானம் மூலம் மூவரையும் பொலிஸார் அனுப்பி வைத்தனர்.

முன்னாள் இந்திய பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் சாந்தன், முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அண்மையில் சாந்தன் உயிரிர்ந்தார். இதேவேளை எஞ்சிய மூவரும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தநிலையில் அவர்களை இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு அனுமதியளித்த நிலையில் அவர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles