பேய் மாளிகையில் குடும்பச் சண்டை..!

நவகமுவ பிரதேசத்தில் “பேய் மாளிகை” பார்க்கச் சென்ற பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் பேய் மாளிகை பார்க்கச் சென்றுள்ள நிலையில், அங்கு கணவன் சவப்பெட்டியில் பூதவுடலாக நடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, ​​21 வயதுடைய மனைவியைத் தாக்க முயன்ற கணவர் உட்பட, மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் இன்று (24) உத்தரவிட்டுள்ளார்.

நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த திருமணமான தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சட்டரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles