Sunday, September 22, 2024
Homeபங்களாதேஷில் தொடரும் வன்முறை : நடிகர்,அவரது தந்தை அடித்துக் கொலை..!

பங்களாதேஷில் தொடரும் வன்முறை : நடிகர்,அவரது தந்தை அடித்துக் கொலை..!

பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு மத்தியில் பங்களாதேஷ் நடிகர் ஷண்டோ கானும், அவரது தந்தையும் தயாரிப்பாளருமான செலிம் கான் ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தந்தை மற்றும் மகன் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டதற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நடிகர் ஷண்டோ கானின் தந்தை செலிம் கான் பங்களாதேஷின் அவாமி லீக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட தலைவர் என்று தகவல் தெரிவிக்கின்றது.

அடித்துக்கொல்லப்பட்ட பங்களாதேஷ் நடிகர் ஷண்டோ கான் 2019 ஆம் ஆண்டில், உத்தம் ஆகாஷ் இயக்கிய ‘பிரேம் சோர்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். புபுஜான், பிக்கோவ், துங்கியாபரார் மியா பாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கௌஷானி முகோபாத்யாய்க்கு ஜோடியாக பிரியா ரே படத்தில் நடித்தார் ஷாண்டோ கான்.

செலிம் தயாரித்த பங்களாதேஷ முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான துங்கிபாராவின் மியா பாயில் அவரது மகன் ஷாண்டோ கான் பங்கபந்துவாக நடித்தார்.

சந்த்பூர் சதர் உபாசிலாவைச் சேர்ந்த லக்ஷ்மிபூர் மாடல் யூனியன் பரிஷத் தலைவராகவும் பாலுகேகோ செலீம் கான் இருந்துள்ளார். அவாமி லீக் ஆட்சியின் போது, சந்த்பூரில் உள்ள பத்மா-மேக்னா நதியில் சட்டவிரோதமாக மணல் வெட்டி, பல கோடி ரூபாய்க்கு அதிபதியான சலீம் கான், இந்த வழக்கில் சிறை சென்றார்.

செலீமும் அவரது மகன் சாந்தோவும் திங்கட்கிழமை சந்த்பூரிலிருந்து தப்பிச் செல்லும் போது பலியா யூனியனில் உள்ள ஃபரக்காபாத் பஜாரில் ஒரு கும்பல் மோசமாக தாக்கத் தொடங்கியது.

ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டு, அங்கிருந்து தப்பினர். சிறிது தூரம் சென்ற பிறகு, மீண்டும் ஒரு கும்பல் தாக்கியதில் சந்த்பூரின் பகாரா பஜாரில் சலீம் கான் மற்றும் அவரது மகன் சாந்தோ கான் இருவரும் கொல்லப்பட்டனர்.

சாந்தா கானின் மரணத்தை அவரது மாமனார் எம்ஐ மோமின் கான் உறுதிப்படுத்தி உள்ளார். இருவரையும் கொன்று சடலத்தை சாலையில் விட்டுச் சென்றது யார் என்பது குறித்து தெரியவில்லை.

முன்னதாக, பங்களாதேஷில் ஏற்பட்ட வன்முறையில் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர். மேலும், அவாமீ லீக் கொறடாவான கிரிக்கெட் வீரர் மஸ்ரஃபி மோர்தசாவின் வீட்டுக்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments