மன்னாரில் வாகன விபத்து : முதியவர் பலி..!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை (06) தனது பேரனை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த 67 வயதுடைய வயோதிபர் மீது வீதியூடாக அதிவேகமாக பயணித்த கூலர் வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது.

இவ்விபத்தில், வயோதிபரும் பேரனும் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்தை ஏற்படுத்திய கூலர் வாகனத்தின் சாரதியை கைது செய்த மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles