Tuesday, September 24, 2024
Homeபாலின சர்ச்சையில் சிக்கிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் தங்கம் வென்று அசத்தல்..!

பாலின சர்ச்சையில் சிக்கிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் தங்கம் வென்று அசத்தல்..!

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பல்வேறு சர்ச்சைகளும், உணர்ச்சிகரமான தருணங்களும் நிறைந்ததாக இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு பெற உள்ளது.

அந்த வகையில், பாலின சர்ச்சைக்கு ஆளான அல்ஜீரிய நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் நேற்று நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

முன்னதாக 66 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலியின் ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவின் இமானே கெலிப்புடன் மோதினார். இதில் இமானே விட்ட குத்தில் கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தது.

முதல் சுற்றில் 46 வினாடிகள் மட்டும் ஆட்டம் நடந்த நிலையில் கரினி, தொடர்ந்து விளையாட மறுத்தார். தனது விளையாட்டு வாழ்க்கையில் இவ்வளவு கடினமான குத்துகளை யாரிடமும் வாங்கியதில்லை என்று கண்ணீர் மல்க கூறி வெளியேறினார். இதையடுத்து இமானே கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையானது.

இமானே கெலிஃப்புக்கு ஆண் தன்மைக்குரிய ஹார்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. இமானேவுக்கு ஆதரவாக ஒலிம்பிக் கமிட்டி துணை நின்றது. உலகம் முழுவதிலும் பலர் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments