Wednesday, September 25, 2024
Homeஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை : எதற்காகத் தெரியுமா..?

ஒரே நாளில் 15 கின்னஸ் சாதனை : எதற்காகத் தெரியுமா..?

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் தனது வாழ்நாளில் 250 உலக சாதனைகளுக்கு மேல் முறியடித்துள்ளார்.

ஒவ்வொரு சாதனையாக முறியடித்த இவருக்கு போரடித்து விட்டதோ என்னவோ, சமீபத்தில் அவர் திடீரென லண்டனிலுள்ள கின்னஸ் உலக சாதனைகளின் தலைமையகத்துக்குச் சென்று, ஒரே நாளில் 15 உலக சாதனைகளை முறியடித்து விட்டுச் சென்றுள்ளார்.

அதாவது, முதலில் ஜக்கிலிங் வித்தை எனப்படும் 3 பழங்களை ஒன்றன் பின் ஒன்றாக உயரே தூக்கிப்போட்டு ஒரு நிமிடத்துக்குள் அதிக தடவைகள் அப்பிள்களைக் கடித்த சாதனையை டேவிட் ரஷ் முறியடித்து, 198 தடவைகள் அப்பிள்களைக் கடித்து உலக சாதனை படைத்துள்ளார்.

2ஆவது சாதனையாக டேபிள் டென்னிஸ் பந்துகளை 2 போத்தல்களின் மூடிகளில் 10 தடவைகள் மாற்று கைகளைப் பயன்படுத்தி வேகமாக துள்ளச் செய்தார். மிகவும் நூதனமாக இச் சாதனையை வெறும் 2.09 நிமிடங்களில் செய்து முடித்து அசத்தியுள்ளார்.

அதேபோல் 30 விநாடிகளில் கையின் பக்கங்களை பேஸ்போலால் மாறி மாறி அடித்த சாதனையையும் அவர் முறியடித்தார். அவர் 125 தடவைகள் பந்தை இவ்வாறு அடித்து அசத்தியுள்ளார்.

இதேபோன்று வாயிலிருந்து சுவரில் பந்தை அடித்துப் பிடித்தல், அமர்ந்தபடி பலூன்களை உடைத்தல், 30 விநாடிகளில் அதிக டி-சேர்ட்கள் அணிதல், 10 டொய்லெட் பேப்பர் ரோல்களை ஒரே கையால் வேகமாக அடுக்கி வைத்தல், அதிகளவு தண்ணீரை 30 விநாடிகளில் கைகளால் தள்ளிவிடுதல், ஒரு லீற்றர் எலுமிச்சை சாற்றை ஸ்ட்ரோ மூலம் மிக வேகமாகக் குடிப்பது உள்ளிட்ட 15 வகைகளில் குறைந்த நிமிடத்தில் கின்னஸ் சாதனையை ஒரே நாளில் இந்த சாதனை மனிதன் முறியடித்துக் காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments