யாழில் 42 மில்லியன் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது..!

யாழில் சுமார் 42 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் அரியாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles