Tuesday, September 24, 2024
Home20.08.2024 இன்றைய இராசி பலன்

20.08.2024 இன்றைய இராசி பலன்

குரோதி வருடம் ஆவணி மாதம்  நான்காம் நாள் செவ்வாய்க்கிழமை. ஆங்கில வருடம் 20.08.2024

இன்றைய இராசி பலன்

மேஷராசி

இன்று உங்கள் வேலைகளை சிறப்பாக முடிக்க முடியும். வேலை தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். கடைபட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

ரிஷபராசி

குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். இன்று உங்கள் வேலைகளை கவனமாக செய்து முடிக்கவும். வியாபாரம் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். ஆசையோடு எதிர்பார்த்த அரசாங்க வேலை கிடைத்து நிம்மதி அடைவீர்கள்.

மிதுனராசி

தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த நினைப்பீர்கள். இன்று தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையிடத்தில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தந்தையாருக்கு மருத்துவ செலவு செய்வீர்கள்.சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.

கடகராசி

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. தொழில் தொடர்பாக புதிய திட்டங்களை செயல்படுத்த நினைப்பீர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேர்த்தி செயல்படுவீர்கள். தொழில்துறையில் இடர்ப்பாடுகளை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் நிலையான வருமானம் இல்லாமல் தடுமாறுவீர்கள்.

சிம்மராசி

வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் சிறப்பான நன்மையை தரும். உங்களின் நிதிநிலை வலுப்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவீர்கள். அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள ஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.

கன்னிராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப பிரச்சினைகளால் வேலை முடிப்பதில் தொய்வு ஏற்படும். எதிரிகள் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். அசதியை பார்க்காமல் கடுமையாக வேலை செய்வீர்கள். குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்வீர்கள். உடல் சோர்வு, மனச்சோர்வால் பாதிக்கப்படுவீர்கள்.

துலாம்ராசி

அரசியலில் புதிய பதவிகள் கிடைக்கும். கடன் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். என்று உங்களின் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். பணியிடத்தில் உங்களின் உரிமை அதிகரிக்கும். குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். தோஷ நிவர்த்திக்கான பூசைகளை வீட்டில் நடத்துவீர்கள்.உங்களின் பேச்சு, செயலை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

விருச்சிகராசி

இன்று பல்வேறு வழிகளில் நன்மைகள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வசதியைப் பெருக்கிக் கொள்வீர்கள். வியாபாரத்தை நேர்த்தியாக நடத்துவீர்கள்.
வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டியது இருக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான தடைகள் நீங்கும். இன்று சில அதிகாரிகளின் உதவியால் லாபத்தை பெறுவீர்கள்.

தனுசுராசி

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையில் இருந்த தடைகள் நீங்கும். கணினித்துறையில் கணிசமான லாபம் பார்ப்பீர்கள். தொழில் எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் பெறுவீர்கள். தந்தையின் உடல்நிலை தொடர்பாக கவனமாக இருக்கவும்.

மகரராசி

கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். அரசாங்க வேலைக்காகத் தேர்வு எழுதி வெற்றி பெறுவீர்கள். இன்று எந்த வகையான பண பரிவர்த்தனைகளிலும் கவனமாக இருக்கவும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்க்கவும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான கவலைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கும்பராசி

உங்கள் சகோதர சகோதரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஒருவரிடமிருந்து நல்ல செய்திகளைக் கேட்கலாம். உங்கள் வேலையை அதிர்ஷ்டத்திற்கு விட்டுவிடாதீர்கள். ஆன்மீக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

மீனராசி 

பிள்ளைகளின் மூலம் சில நல்ல செய்திகள் தேடி வரும். வணிகத்தில் சாதகமான நாள். இன்று பண ஆதாயம் கிடைக்கக்கூடிய நாள். உடல்நல பிரச்சனைகளில் இருந்த தொந்தரவுகள் தீரும். உங்கள் எதிரிகள் உங்கள் வேலையைத் தடுக்க முயற்சிப்பார்கள். மற்றவர்  சொல்வதைக் கேட்டு வருத்தப்பட வேண்டாம்.

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments