Monday, September 23, 2024
Homeதென்னாபிரிக்க ஏ அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை..!

தென்னாபிரிக்க ஏ அணியை இலகுவாக வீழ்த்திய இலங்கை..!

தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பொட்செவ்ட்ரூமில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணியானது நுவனிது பெர்னாண்டோவின் 97 ஓட்ட உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கடினமான வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க ஏ அணி 36.5 ஓவர்கள் நிறைவில் 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் தொடரில் இலங்கை ஏ அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் 2வது ஆட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments