Thursday, November 21, 2024
google.com, pub-5376066798149206, DIRECT, f08c47fec0942fa0
HomeMain NewsUKஉக்ரைனை விட்டு வெளியேறுங்கள்... புடினுக்கு பிரித்தானிய பிரதமர் கடும் எச்சரிக்கை

உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்… புடினுக்கு பிரித்தானிய பிரதமர் கடும் எச்சரிக்கை

உக்ரைன் விவகாரத்தில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ரஷ்ய ஜனாதிபதி புடினை கடுமையாக சாடியுள்ளார்.

பிரேசிலில் நடைபெற்ற G 20 மாநாட்டில் கலந்துகொண்ட உலக நாடுகளின் தலைவர்களிடையே உரையாற்றிய பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர், மாநாட்டில் கலந்துகொள்ளாத புடினை கடுமையாக விமர்சித்தத்துடன், உக்ரைனை விட்டு வெளியேறுங்கள் என புடினை சாடியுள்ளார்.

பிரித்தானியர்கள் அணு ஆயுதப் போரை எதிர்கொள்ளத் தயாராகவேண்டுமா என ஸ்டார்மரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஸ்டார்மர், புடின் பொறுப்பற்ற விதத்தில் பேசிக்கொண்டிருப்பதாகவும், அவரது அச்சுறுத்தலைக் கண்டு பயந்து பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கிவரும் ஆதரவிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே அமெரிக்கா தனது நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ரஷ்யாவுக்கெதிராக பயன்படுத்த அனுமதியளித்துள்ள நிலையில், தற்போது அத்தகைய ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க பிரித்தானியாவுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகிறது.

ஆனால், உக்ரைனுக்கு அத்தகைய ஆயுதங்களை வழங்கும் நிலையில், பிரித்தானியா மீதுதான் முதல் தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய ராணுவ ஜெனரல்களில் ஒருவரான Andrey Gurulev என்பவர் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments