வட மாகாணத்தில் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்த சிலருக்கு எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு உயிரிழந்தவர்களின் இரத்த மற்றும் சிறுநீரக மாதிரிகள் தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இந்தநிலையில் குறித்த மாதிரிகளில் சிலவற்றில் எலிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.