ரொறன்ரோவில் நீர் மற்றும் கழிவு சேகரிப்பிற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பை மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ வீட்டு உரிமையாளர்கள் மீது இவ்வாறு கட்டண அதிகரிப்பு விதிக்கப்பட உள்ளது.
நீர் மற்றும் கழிவு நீர் என்பனவற்றிற்காக கட்டணங்களை 3.7 வீதத்தினால் அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் இவ்வாறு கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் மூலம் இந்த கட்டண அதிகரிப்பு மூலம் சுமார் 53 மில்லியன் டொலர்களை மேல் அதிகமாக ஈட்ட முடியும் என நகராட்சி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.