Monday, February 2, 2026
HomeCinemaகுட் பேட் அக்லி படத்தில் Cameo கொடுக்கும் பிரபலம்

குட் பேட் அக்லி படத்தில் Cameo கொடுக்கும் பிரபலம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’.

இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையை மேற்கொள்கிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சிம்ரன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி குட் பேட் அக்லி திரைப்படத்தில் சிம்ரன் சிறப்பு தோற்றத்தில் வருவார் என்று கூறப்படுகிறது.

முன்னதாக நடிகர் அஜித் குமார் மற்றும் சிம்ரன் இணைந்து வாலி திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் நடித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular