அதிர்ச்சி அளித்த லைகா நிறுவனம்

நடிகர் அஜித் குமார் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி.

அஜித் குமாருடன், ஆரவ், அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை என்.பி. ஸ்ரீகாந்த் மேற்கொள்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர் நாளை புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

விடாமுயற்சி பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது என்ற நிலையில் தற்போழுது ரிலீஸ் தேதி தள்ளி வைப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:- சில தவிர்க்க முடியாத காரணங்களால் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது.

பிரேக் டவுன் ஹாலிவுட் படத்தின் உரிமையை படக்குழுவினரால் தற்போது வரை வாங்க முடியவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரீலிஸ் தேதியை விரைவில் படக்குழு அறிவிப்பார்கள் என எதிர்ப்படுகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles