Friday, May 23, 2025
HomeHoroscopeபுலி போல் பதுங்கி இருந்து காரியம் சாதிக்கும் ராசியினர்...!

புலி போல் பதுங்கி இருந்து காரியம் சாதிக்கும் ராசியினர்…!

நம்மிள் சிலர் புலிகளைப் போன்று பதுங்கிப் பாயும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு செய்யாமல் பொறுமையாக இருந்து காரியத்தை முடிப்பார்கள். அப்படியான குணம் கொண்டவர்களை புலிக்கு இணையாக ஒப்பிடுவது வழக்கம்.

துல்லியமான பார்வை, சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை மற்றும் சிக்கலான சூழ்நிலைகளை திறம்பட எதிர்நோக்கி வழிநடத்தும் திறன் உள்ளிட்ட பண்புகள் தான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மாத்திரம் தான் புலிக்கு இணையான குணங்கள் இருக்கும். அவர்களின் வெற்றிக்கு இந்த குணம் தான் முக்கிய காரணமாக இருக்கும்.

அந்த வகையில், புலி போன்று பதுங்கி இருந்து வேலைப் பார்க்கும் குணம் கொண்டவர்கள் என்னென்ன ராசிகளில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் தீவிரம், கவனம் மற்றும் திட்டமிடும் மனநிலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்வதில் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். சிக்கலான திட்டமிடல் திறமையானவர்களாக இருப்பார்கள்.

கூர்மையான உள்ளுணர்வு மற்றும் சூழ்நிலைகளை ஆழமாக பகுப்பாய்வு செய்யும் திறன் அவர்களை புலிகள் போன்று செயற்பட வைக்கும். மூலோபாய அணுகுமுறை அனைத்து விஷயங்களையும் கவனிக்கும் நுணுக்கம் புரிதலை ஏற்படுத்தும்.

மகரம்

சனிபகவானால் ஆளப்படும் மகர ராசிக்காரர்கள் ஒழுக்கம் மற்றும் நீண்டகால பார்வை இவர்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். யதார்த்தமான நடைமுறையுடன் வாழ்வதால் இவர்களின் அணுகு முறை வித்தியாசமாக இருக்கும்.

கட்டமைக்கப்பட்ட திட்டங்களை உருவாக்குதலில் திறமையானவர்களாக இருப்பார்கள். நீண்ட கால பலன்களில் கவனம் செலுத்தி வளங்களை திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் இருப்பதால் வியாபாரத்தை திறம்பட நடத்துவார்கள். திட்டமிடல் மற்றும் அதை செயல்படுத்துவதில் வல்லுநர்களாகவும் இருப்பார்கள்.

கன்னி

புதனால் ஆளப்படும் கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு மனம் மற்றும் புலி போன்ற புத்திக்கூர்மைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த பூமி ராசி முழுமையான ஆராய்ச்சி மற்றும் கவனமாக பரிசீலிப்பதன் அடிப்படையில் திட்டங்களை உருவாக்குவதில் சிறந்தவர்களாக விளங்குவார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் வரக்கூடிய சிக்கல்களைக் கண்டறிந்து, தீர்வுகளை துல்லியமாக எடுப்பார்கள். அவர்களிடம் இருக்கும் நுணுக்கமான அணுகுமுறை அடுத்தக்கட்டத்திற்கு அவர்களை கொண்டு செல்லும். பல்வேறு சூழல்களில் மிகவும் பயனுள்ள திட்டமிடும் நிபுணர்களாக செயல்படுவார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments