ஓடிடி தளம் சரிவு தொடர்பில் தமிழக முதலமைச்சர் விஜயிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
அந்த கோரிக்கை கடிதத்தில், “மாண்புமிகு முதலமைச்சர் விஜய் சார் அவர்களுக்கு மிக முக்கியமான வேண்டுகோள். கமல்ஹாசன் சார் கேட்டுக் கொண்டதைப் போல, தமிழக அரசு ஒரு ஓடிடி தளத்தைத் தொடங்க வேண்டும். அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு கட்டத்தில் ஓடிடி சந்தை திடீரென உருவாகி மிக வேகமாக வளர்ச்சி பெற்றது. ஆனால் தற்போது அந்த சந்தை திடீரென சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் திரைப்படத் துறை மிகுந்த குழப்பத்தில் உள்ளது.
வெகு ஆண்டுகளுக்கு முன்பே திரையரங்கு டிக்கெட் விலைகள் உயர்த்தப்பட்டன. தற்போது அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை மேலும் உயர்த்துவது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்,” என்றார்.
