Monday, February 2, 2026
HomeMain NewsMiddle Eastகாஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல்...!

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த இஸ்ரேல்…!

இஸ்ரேலின் 19 மாத கால இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதோடு காஸாவில் தனது தாக்குதலை நிறுத்தி மேலும் 10 பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளது.

அமெரிக்க மத்தியஸ்தர்கள் இந்த திட்டத்தை இரவோடு இரவாக முன்வைத்ததாக இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதில் ஐந்து உயிருள்ள பணயக்கைதிகள் மற்றும் ஐந்து இறந்த கைதிகளை விடுவித்தல் காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குதல், 70 நாள் போர் நிறுத்தம் மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் ஆகியவை அடங்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.

ஹமாஸிடம் சரணடைதல் என்று வர்ணித்து இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததாக அந்த அதிகாரி கூறினார்.

மார்ச் மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்வைத்த ஒப்பந்த முன்மொழிவான விட்காஃப் கட்டமைப்பை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது,

இது 50 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக கூடுதல் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், நீண்ட போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக உறுதியளிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular