Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryமொத்த உக்ரைனும் ரஷ்யாவுக்கே சொந்தம் – புட்டின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மொத்த உக்ரைனும் ரஷ்யாவுக்கே சொந்தம் – புட்டின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

மொத்த உக்ரைனும் தமது நாட்டுக்குச் சொந்தம், இருநாட்டு மக்களும் ஒன்றே என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அதனை உக்ரைன் மறுத்துள்ளது. அமெரிக்காவின் அமைதி முயற்சிகளை ரஷ்யா புறக்கணிப்பதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவின் எல்லைக் கட்டுப்பாடுகளின் உண்மை நிலவரத்தை உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என புட்டின் வலியுறுத்தினார்.

ரஷ்யாவின் நிபந்தனைகளை உக்ரைன் தொடர்ந்து மறுத்தால் உக்ரைன் மேலும் எல்லைப்பகுதிகளை இழக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

சூமி வட்டாரத்தில் ரஷ்யப் படைகளைத் தடுத்துவைத்திருப்பதாய் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறினார்.

ரஷ்யா உக்ரைனின் 4 வட்டாரங்கள்மீதும் கிரைமிய மீதும் சொந்தம் கொண்டாடுவது சட்டத்துக்குப் புறம்பான செயல் என்று கீவ்வும் அதன் மேற்கத்திய பங்காளித்துவ நாடுகளும் கூறுகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular