Monday, February 2, 2026
HomeMain NewsEurope2025 ஆம் ஆண்டில் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர்!

2025 ஆம் ஆண்டில் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயை கடந்துள்ளனர்!

2025 ஆம் ஆண்டில் இதுவரை 25,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்துள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

நேற்று (30.07) மாத்திரம் டோவரில் 898 பேர் கரைக்குக் கொண்டுவரப்பட்டதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆங்கிலக் கால்வாயை கடந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,436 ஆகக் உயர்ந்துள்ளது.

மக்கள் கடத்தல் கும்பல்களைச் சமாளிக்க பிரான்சுடன் புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாகவும் பிரித்தானிய அரசாங்கம் கூறிவருகிறது.

தேசிய குற்றவியல் நிறுவனம் பல்கேரிய அதிகாரிகளுடன் இணைந்து கால்வாயில் பயன்படுத்த நோக்கம் கொண்ட 25 சிறிய படகுகளைக் கைப்பற்றியதாக அறிவித்தது.

2020 ஆம் ஆண்டு முழுவதும் 8,461 கடவைகள் இருந்தன, 2019 இல் அந்த எண்ணிக்கை 1,835 ஆக இருந்தது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular