ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம்: சனிக்கிழமை ட்ரம்ப் நேரடி பேச்சுவார்த்தை

கடந்த மூன்று வாரங்களாக மேற்காசியப் பகுதியில் நீடித்து வந்த போர் மேகங்கள் விலகத் தொடங்கியுள்ளன. ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், வரும் சனிக்கிழமை ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 28-ம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், ஈரானும் பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் ஐ.நா சபையும் போரை நிறுத்தத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழிவிடும் வகையில் ட்ரம்ப் இன்று அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்:

ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வரும் சனிக்கிழமை ஈரானுடன் முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதன் மூலம் விரைவில் உடன்படிக்கை எட்டப்படும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என உறுதியளித்துள்ள ட்ரம்ப் உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணைப் பாதை விரைவில் திறக்கப்படும். அமெரிக்காவும் ஈரானும் இணைந்து இப்பகுதியைப் பாதுகாக்கும் எனவும் “ஈரான் மீதான இந்த நடவடிக்கை ஒரு இராணுவ நடவடிக்கையே தவிர, அது முழு அளவிலான போர் அல்ல. விரைவில் ஒரு நல்ல உடன்படிக்கை ஏற்படும்,” என தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles