13 பெண்களை பாலியல் வல்லுறவு புரிந்த பிரான்ஸின் பிரபல நடிகர் கைது

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல பொப் பாடகரும், முன்னணி நடிகருமான பற்றிக் புரூயல் 13 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தார் என் குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் 1980 மற்றும் 1990களில் பொப் இசையில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் பற்றிக் புரூயல் (வயது 67). 40 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

கடந்த 1997, 2000 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளில் பற்றிக் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார் என மூன்று பெண்கள் அளித்த முறைப்பாடு செய்திருந்தனர். விசாரணையின் போது, நடிகர் பற்றிக் புரூயல் பாலியல் தொல்லை கொடுத்தார் என மேலும் பல பெண்கள் அடையாளம் காணப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

அவரால் நேர்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல்களை வாக்குமூலமாக அளித்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதுவே பற்றிக் புரூயல் நேற்று கைது செய்யப்பட முக்கியக் காரணமாக அமைந்தது.

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் பற்றிக் புரூயல், தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பிரான்ஸின் உச்ச நட்சத்திரத்தின் கைது பிரெஞ்சுத் திரைத்துறையிலும் இசை உலகிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles