நேற்று வெளியாகிய க.பொ.த. உயர்தரம் பரீட்சை பெறுபெற்றில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் கிளிநொச்சியைச் சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் முதலாமிடம் பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் 2.9400 வெட்டுப்புள்ளிகளுடன் அகில இலங்கை ரீதியாக முதலிடம் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அதேவேளை, உயிரியல் பிரிவில் ஆ.கிரிஷேhந்த் மற்றும் வர்த்தகப் பிரிவில் செல்வி க.மதுமினி ஆகியோர் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.
அவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்ட பலர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
