உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் இன்று (03) பெரிய வெள்ளி (Good Friday) அல்லது புனித வெள்ளி மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இயேசு கிறிஸ்து மனித பாவங்களை மீட்பதற்காக சிலுவையில் அறையப்பட்டு, உயிர் நீத்த தினமே புனித வெள்ளியாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இது கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் (Lent) இறுதி வாரமான புனித வாரத்தின் மிக முக்கியமான நாளாகும்.
இன்றைய தினம் தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் நடைபெறுவதுடன் பலர் நோன்பு நோற்றும் அமைதியாகவும் கடைப்பிடிப்பார்கள்.
இன்று காலை முதல் மதியம் வரை அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும் இயேசுவின் பாடுகளை நினைவுறுத்தும் ‘சிலுவைப் பாதை’ நிகழ்வுகள் நடைபெறும்.
