சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளைக் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர், இன்று திங்கட்டகிழமை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று காலை 06:50 மணியளவில் இந்தியாவின் புதுடில்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான யுஐ-277 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரது பயணப் பொதியிலிருந்த சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 340 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த பயணி மற்றும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles