‘அவர்கள் மனநோயாளிகள். ஒரு மனநோயாளியின் கைகளில் அணு ஆயுதங்களை வழங்க முடியாது’ – இவ்வாறு ஈரான் தொடர்பில் காட்டமாக தெரிவித்திருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.
இன்று திங்கட்கிழமை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்படி கூறினார்.
ஓர் அதிர்ஷ்டவசமான தாக்குதல் மூலமாக ஈரானால் ஓர் அமெரிக்க விமானத்தைச் சுட்டு வீழ்த்த முடிந்தது என்று கூறிய அவர், எங்களிடம் உள்ள சில ஹெலிகொப்டர்களில் ஏராளமான துப்பாக்கிக்குண்டு துளைகள் உள்ளன – எனவும் ஒப்புக்கொண்டார்.
