மின்னல் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் வீடொன்று சேதமடைந்துள்ளது. அந்தநேரத்தில், வீட்டிலிருந்தவர்கள் தெய்வாதீனமாக பாதிப்பு எதுவுமின்றி தப்பினர்.
இன்று திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் பரவலாக இடி – மின்னல் தாக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில், வடமராட்சி – கெருடாவில் பகுதியில வீட்டின் அருகேயிருந்த தென்னை மரத்தை மின்னல் தாக்கியது.
இதில், தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. அத்துடன், அருகிலிருந்த வீடும் சேதமடைந்தது. மின்னல் தாக்கத்தால் வீட்டின் சுவர், யன்னல், கதவு நிலைகளும் சேதமடைந்தன.
அந்தச் சமயத்தில் வீட்டிலிருந்தவர்கள பாதிப்பு எதுவுமின்றி தப்பினர். அயலவர்களின் உதவியுடன் தென்னையில் பற்றிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
