எரிசக்தி நெருக்கடி மற்றும் உள்நாட்டுத் தேவைகளைக் கருத்திற் கொண்டு, எதிர்வரும் புத்தாண்டு; பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டாரா இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளுக்குப் எரிபொருட்களைப் பெறுவதில் பெரும் சவால்களை உருவாக்கியுள்ளது.
எனவே, கடந்த காலங்களில் மின்சாரத்தைச் சேமிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கியமை போன்றே, இந்தப் புத்தாண்டு காலத்திலும் பொறுப்புணர்வுடன் செயற்படவும்;.
குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் மின்சாரத் தேவை மிக அதிகமாக இருப்பதால், அந்த நேரத்தில் தேவையற்ற மின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளவும்.
விடுமுறை நாட்களில் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும், சூரிய சக்தி மூலம் பகல்வேளையில் அதிக மின்சாரம் கிடைப்பதாலும், சமையல், துணி துவைத்தல் போன்ற பணிகளைப் பகல் நேரத்திலேயே முடித்துக் கொள்ளுமாறு இலங்கை நிலையான ஆற்றல் அதிகாரசபையின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
