ஹோர்முஸ் நீரிணையில் நுழையும் அல்லது வெளியேற முயற்சிக்கும் சகல கப்பல்களும் முற்றுகைக்கு உள்ளாகும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அவர் சற்றுமுன்னர் தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவில்,
சமரச பேச்சு நன்றாக நடந்தது. பெரும்பாலான விஷயங்களில் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், உண்மையில் முக்கியமான ஒரே விஷயம் அணு ஆயுத விடயத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
கடல் கண்ணிவெடிகள் எங்காவது இருக்கலாம் என்று ஈரான் கூறுகிறது. அத்துடன், அவர்கள் தவிர, அவை யாருக்கும் தெரியாது என்றும் சொல்கிறது. இதன் மூலம் நீரிணையூடானான பயணத்தை தடுக்கிறது.
ஈரானுக்கு சுங்கம் செலுத்தியுள்ள சகல கப்பல்களையும் சர்வதேச கடல் பரப்பில் தேடித் தடுத்து நிறுத்த எங்கள் கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். அத்துடன், ஈரானியர்கள் வைத்துள்ள கடல் கண்ணிவெடிகளையும் கடற்படை அழிக்கும். சட்டவிரோதமாக சுங்க கட்டணம் செலுத்தும் யாருக்கும் கடலில் பாதுகாப்பான பயணம் இருக்காது. எங்களை தாக்கும் எந்தவோர் ஈரானியரும் அழிக்கப்படுவார்கள். முற்றுகை விரைவில் ஆரம்பமாகும் – என்றும் குறிப்பிட்டுள்ளார்.
