இஸ்ரேலின் மொசாட் உளவுத் துறைக்கு ஒத்துழைத்ததாகவும் நாட்டுக்குள் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்குறித்த இருவரும் மொசாட்டுடன் தொடர்புடைய ஒரு உளவு வலையமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர் எனவும் ஈராக்கின் குர்திஸ்தான் பகுதி உட்பட வெளிநாடுகளில் பயிற்சி பெற்றிருந்தனர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
கடவுளுக்கு எதிரான பகை மற்றும் விரோதக் குழுக்களுடன் ஒத்துழைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இக் குற்றச்சாட்டுகள் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு உயர் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
