அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இலங்கைப் பெண்!

அமெரிக்காவில் சிலி பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த 29 வயதுடைய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை மாலை 6.45 மணியளவில் ஸ்கொட்ஸ்வில் வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

லொறி ஒன்று, முன்னால் சென்ற வாகனத்தை கடக்க முற்பட்ட போது, இலங்கை பெண் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளயுள்ளது.

இந்த விபத்தில் இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் அவருடன் காரில் பயணித்த மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு அவர திருமணமாகி கணவனுடன் அமெரிக்கா சென்ற நிலையில் இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் பூதவுடலை இலங்கைக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக, ரோசெஸ்டர் இலங்கை அமெரிக்க சங்கத்தினால் நிதியுதவித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles