திரு கந்தசாமி பரமலிங்கம்

மலர்வு20 OCT 1940 – உதிர்வு22 APR 2026
இலங்கை நிர்வாக சேவை செயலாளர் – வட/கிழக்கு பொது நிர்வாக சேவை, கமநல சேவை, ஆணையாளர் (வட/கிழக்கு மாகாணங்கள்), பிரதம செயலாளர் (இந்து கலாச்சார அமைச்சு), அங்கத்தவர் (மேல் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழு), தலைவர் (வடமாகாண அரச சேவைகள் ஆணைக்குழு), தலைவர் (கொழும்பு/நயினாதீவு சமூக, பொருளாதார, கல்வி, கலாச்சார அபிவிருத்திச் சங்கம்), தலைவர் (நயினை நாகபூசணி ஆலய அறங்காவலர் சபை), போஷகர் (நயினை மணிபல்லவ கலா மண்டம்) முதலான அரச, அரசசார்பற்ற பதவிகளை வகித்தவர்
வயது 85
நயினாதீவு, Sri Lanka (பிறந்த இடம்) கொக்குவில், Sri Lanka வவுனியா, Sri Lanka திருகோணமலை, Sri Lanka கொழும்பு, Sri Lanka

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி பரமலிங்கம் அவர்கள் 22-04-2026 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் கந்தசாமி(நயினாதீவு நாகபூசணி ஆலய பரம்பரை தர்மகத்தா), நயினைப் புலவர் நாகமணி நாகரெத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சோமசுந்தரம், விசாலாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விவேகானந்தா(லண்டன் – Sutton Councillor), கிருபாஹரி (ஆசிரியை யா/பெரியபுலம் ம.வி), ஜெயபிரபா(ஆசிரியை- St claire school) குகானந்தன்(லண்டன் – MBA வணிக முகாமையாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுகந்தினி, இளங்கோவன்(ஓய்வுநிலை பிரதம செயலாளர், வடமாகாணம்), குகானந்தன்(கணனி மென்பொறியியலாளர்), கலைமகள் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஜதுசணன், செந்தீபன், நந்தினி, லலித், புவிநயன், அஞ்சலி, அபிராமி, அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, கனகசபாபதி, குகதாசன், சவுந்தரம், காமாட்சிசுந்தரம், பராசக்தி, மகாலிங்கம், கமலாம்பிகை, இராசரெத்தினம் மற்றும் லலிதாம்பாள், காலஞ்சென்றவர்களான மகாதேவா, ஞானசுந்தரம் மற்றும் நவரெத்தினராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் பரமேஸ்வரன், மகேஸ்வரி, ஞானேஸ்வரன், விக்கினேஸ்வரன், பரமேஸ்வரி, சுந்தரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 25-04-2026 சனிக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் யாழ். கொக்குவிலில் 63/1, K.K.S. வீதியில் உள்ள அவரது கந்தகோட்டை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
63/1, K.K.S. வீதி,
கொக்குவில், யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles