பிரிட்டனில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் ; நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்

சமூக ஊடகங்களில் தன்னை ஒரு பதின்மவயதினராகக் காட்டிக்கொண்டு, 13 வயது சிறுமியை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

28 வயதுடையவர் என நம்பப்படும் அப்துல் கான், என்ற புகலிடக் கோரிக்கையாளர் 2015ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ளார்.

இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களை தன்வசப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். இவரால் பதின்மவயதுடைய சிறுவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு முன்பும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டில் ஈடுபட்டமைக்காக அவர் 23 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு 09 அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கை அனுபவித்த பிறகு, தானாகவே ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார் எனத் தீர்ப்பளித்துள்ளது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த விசாரணையில், கான் தனது பாதிக்கப்பட்ட சிறுமியுடன் ஸ்னாப்சாட்டில் 14 வயது சிறுவனாக நடித்துத் தொடர்பு கொண்டதாகவும், பின்னர் நாட்டிங்ஹாமின் கிளிஃப்டன் பகுதியில் உள்ள ஒரு இயற்கை காப்பகத்தில் அவரைச் சந்தித்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles