போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களால் தனக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோரியதற்குப் பதிலளிக்கும் விதமாக, “அவர்கள் கொன்ற மற்றும் கடுமையாகக் காயப்படுத்திய அனைத்து மக்களுக்கும்” ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக இரு நாடுகளுக்கும் இடையே புதிய கப்பல் வழித்தடங்களை வரையறுக்கும் ஒப்பந்தத்தை ஓமானுடன் நெருங்கி வருவதாக ஈரான் வார இறுதியில் கூறியது.

ஆனால், அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு, இழப்பீடு, தடைகள் மற்றும் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் ஈரான் மீண்டும் வலியுறுத்தியது.

ஈரானின் இந்த கருத்துக்கு இன்று பதிலளித்த ட்ரம்ப், இது ஒரு சுவாரஸ்யமான யோசனை, ஏனென்றால் இப்போது நானும் ஈரானிடமிருந்து இழப்பீடு கோருகிறேன்; அவர்கள் தங்களது சாலையோரக் குண்டுகள் மற்றும் பல மோதல்களால் கொன்ற மற்றும் கடுமையாகக் காயப்படுத்திய அனைத்து மக்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் 2000 ஆம் ஆண்டு அக்டோபரில் யேமன் துறைமுகம் ஒன்றில், அமெரிக்க கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணைத் தகர்ப்புக் கப்பலான யுஎஸ்எஸ் கோல் மீது நடத்தப்பட்ட கொடூரமான குண்டுத் தாக்குதலுக்காக ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles