பிரித்தானியாவின் வோல்வர்ஹாம்டனில் (Wolverhampton) உள்ள குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர சேவைப் பிரிவினர், அந்த வீட்டிலிருந்து 02 குழந்தைகளை மீட்டனர். இருப்பினும் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு குழந்தைகளும் பெண் ஒருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் குறித்த வீட்டைச் சுற்றி வளைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
