லண்டனில் நீரில் மூழ்கி தாயும், சேயும் உயிரிழப்பு!

லண்டனின் எல்தோர்ன் (Elthorne) பூங்காவில் அமைந்துள்ள நீர்நிலையில் சிக்கித் தவித்த தாயும், மகனும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(26) இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பெருநகர காவல்துறையினர் நீரில் மூழ்கியிருந்த இருவரையும் மீட்டு சிகிச்சையளித்தபோதிலும், அவர்கள் இருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது, ஆனால் ஆரம்பகட்ட தகவல்களின்படி, அவர்களின் மரணங்கள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படவில்லை.

துப்பறியும் கண்காணிப்பாளர் பீட் தாக்கரே, குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, முதலுதவி அளித்தவர்கள் மற்றும் பொதுமக்களின் முயற்சிகளையும் பாராட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles