காங்கிரஸில் உரையாற்றி வரலாறு சாதனை படைக்கிறார் மன்னர் சார்லஸ்

மன்னர் சார்லஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இடையிலான இருதரப்பு சந்திப்புக்கு முன்பு, அரச குடும்பத்தினர் வெள்ளை மாளிகையில் நடைபெறும் இராணுவ வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

அதன்பின்இ காங்கிரஸில் உரையாற்றும் இரண்டாவது பிரித்தானிய மன்னர் என்ற
வரலாற்றுச் சாதனையை மன்னர் சார்லஸ் படைக்க உள்ளார். இதற்கு முன், அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி 1991ஆம் ஆண்டு அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியிருந்தார்.

ஈரான் போர் சூழ்நிலை காரணமாக இரு நாடுகளின் உறவுகள் பதற்றமாக இருக்கும் நேரத்தில் இந்தப் பயணம் இடம்பெற்றள்ளது.

இந்த விஜயம், டிரம்ப் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இடையிலான உறவை மேம்படுத்த உதவும் என வொஷிங்டன் நம்புகிறது.

மேலும்இ வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்தின்போது வொஷிங்டன் டி.சி.யில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து மன்னர் அனுதாபம் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திங்களன்று, மன்னர் மற்றும் ராணி கமிலாவை வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றார்.

மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் மேற்கொண்டுள்ள நான்கு நாள் அமெரிக்க அரசுமுறைப் பயணத்தின் இரண்டாவது நாள் இன்று நடைபெறுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles