கிளிநொச்சியில் நேற்று வியாழக்டகிழமை வீசிய மினி சூறாவளியால் சந்தை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
மழை காரணமாக, கரைச்சி பிரதேச சபையின் கீழ் இயங்கும் பரந்தன் பொதுச் சந்தையின் கொட்டகை தூக்கி வீசப்பட்டதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், மரக்கறிகள் அனைத்தும் மழையில் நனைந்தமையால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டனர்.

