மலேசியாவின் பத்து காஜா அருகே இன்று திங்கட்கழமை அதிகாலை சுமார் 2.40 மணியளவில், வீதியின் நடுவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவர் மீது பஸ் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
ஏழாவது மைலில் உள்ள, ஜாலான் தஞ்சோங் துவாலாங் என்ற இடத்தில், பஸ் மோதியதில் 30 வயதான பழங்குடியினத்தைச் சேர்ந்த ஷா ரின் புசு என்ற தோட்டத் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று பத்து காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர் நூர் ஏவான் முகமது கூறினார்.
பாதிக்கப்பட்டவர் கோப்பெங்கிலிருந்து கம்போங் ஆயர் தேன நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையின் நடுவில் திடீரென வந்த பஸ் அவர் மீது மோதியதால் மரணம் நிகழ்ந்தது என்று நூர் ஏவான் தெரிவித்தார்!.
