யாழ்ப்பாணம் – தமிழ்நாடு பயணிகள் சேவையில் ஈடுபட்ட கப்பல் நடுக்கடலில் பழுதடைந்தது. இதனால், சுமார் 6 மணி நேரம் பயணிகள் கடலில் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
காங்கேசன்துறை – நாகபட்டினம் பயணிகள் சேவையில் ஈடுபடும் கப்பலே இவ்வாறு பழுதடைந்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட கப்பல் இரவு 11 மணியளவிலேயே நாகபட்டினத்தை அடைந்தது.
கப்பல் நடுக்கடலில் பழுதடைந்து நிற்பதைக் கண்ட மீன்பிடி படகுகள் பயணிகளை மீட்டதுடன், கப்பலையும் கரையை நோக்கி இழுத்துச் சென்றன.
கப்பல் பழுதடைந்ததால் அச்சமடைந்த பயணிகள் பலரும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உள்ளிட்ட உபாதைகளுக்கு உள்ளாகினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
