சிங்கப்பூரில் 2 லட்சம் பேர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிப்பு

சிங்கப்பூரில் நான்பு ஆண்டுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிறுநீரகச் செயல்பாடு பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

இதையடுத்து பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறைக்கு வெளியே செயல்படும் 1,000 இற்கும் மேற்பட்ட ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ மருந்தகங்கள் இத்தகைய நோயாளிகளைக் கண்காணிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நடவடிக்கையை சுகாதார அமைச்சு கொண்டு வந்துள்ளது. சிறுநீரக நோய் மேலும் மோசமாகி நாட்டின் சிறுநீரகச் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான தேவை அதிகரிப்பதைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.

18 முதல் 74 வயது வரையிலான சிங்கப்பூர்வாசிகளிடையே 2023இற்கும் 2024இற்கும் இடையே நாட்பட்ட சிறுநீரக நோய் 13.9 வீதம் அதிகரித்துள்ளது.

இது, 2019 முதல் 2020 வரை இருந்த 8.7 வீதத்தைவிட ஏறக்குறைய 60 வீதம் உயர்வாகும் என்று ஒக்டோபர் 2025இல் சுகாதார அமைச்சு வெளியிட்ட மக்கள்தொகை சுகாதார ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles